Advertisement

21,000 விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி – எங்கே தெரியுமா?

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் 11 நாட்களுக்கு சிட்லபாக்கத்தில் 21,000 விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடைபெறுகிறது.

குரோம்பேட்டை, ராதாநகரை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன். தீவிர விநாயகர் பக்தரான இவர் கடந்த 17 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளுடன் இலவசமாக கண்காட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிட்லப்பாக்கம், காந்தி தெரு, ஸ்ரீலட்சுமி ராம் கணேஷ் மகாலில் 21 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கூடிய 18ஆம் ஆண்டு விநாயகர் கண்காட்சி தொடங்கியுள்ளது.

Advertisement

இன்று 7ம்தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ள கண்காட்சியில் பல்வேறு விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக சிப்பிக்குள் முத்து போல பிள்ளையார் இருப்பது போல, இந்த ஆண்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இருளிலும் மின்னும் ரேடியம் பிள்ளையார், திண்ணையில் படுத்து ஓய்வெடுக்கும் பிள்ளையார், சங்கு பிள்ளையார் என பல்வேறு பிள்ளையார்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சியில் அரை இன்ச்சில் இருந்து 8 அடி உயரம் வரையிலான பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஐம்பொன், இரும்பு, கண்ணாடி உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியை காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் பொதுமக்கள் பார்க்க இலவசமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இன்று தொடங்கிய இந்த கண்காட்சி வரும் 17ஆம் தேதி வரை மக்கள் பார்க்க கூடிய அளவிற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் இடம் பெற்றுள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement