மறைமலைநகரில் பைக்குகளைத் திருடி பாகங்களாகப் பிரித்து விற்று வந்த ஏசி மெக்கானிக்கை 150 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மறைமலைநகர் இரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து அரங்கேறி வந்த இருசக்கர வாகனத் திருட்டுச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த ஏசி மெக்கானிக்கை மறைமலைநகர் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
மறைமலைநகர் இரயில் நிலையப் பகுதி மற்றும் நகரின் முக்கிய இடங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மாயமாகி வந்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதுதொடர்பாகக் காவல் நிலையத்தில் அடுத்தடுத்துப் புகார்கள் குவிந்ததைத் தொடர்ந்து, குற்றவாளிகளை உடனடியாகப் பிடிக்க மறைமலைநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் காவலர்கள் பெருமாள், ராஜா, ஜாம்ஷீட் ஆகியோர் அடங்கிய சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டது.
விபரம் சேகரித்த தனிப்படை போலீசார், குற்றவாளியைக் கூண்டோடு பிடிக்க அப்பகுதியில் உள்ள சுமார் 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை இரவு பகலாக அணுவணுவாக ஆய்வு செய்தனர். அதில் பதிவான சந்தேகத்திற்கிடமான நபரின் நடமாட்டத்தை நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் பின்தொடர்ந்தபோது, அவர் கூடுவாஞ்சேரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த வீட்டை சுற்றிவளைத்த போலீசார், சந்தேக நபரை மடக்கிப் பிடித்துக் காவல் நிலையம் கொண்டு வந்து பாணியில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிடிபட்ட நபர் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் கேசவன் (41) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் போலீசாரையே அதிர வைத்தது. திருடிய இருசக்கர வாகனங்களை அப்படியே முழுமையாக விற்றால் மாட்டிக்கொள்வோம் என்பதால், பைக்குகளைத் தனது வீட்டிற்குக் கொண்டு சென்று உதிரி பாகங்களாகக் கழற்றிப் பிரித்து, சென்னை புதுப்பேட்டையில் உள்ள பழைய இரும்பு மற்றும் உதிரிபாகக் கடைகளில் விற்றுப் பணம் சம்பாதித்து வந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து கேசவன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரிடமிருந்து 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு செல்போனைப் பறிமுதல் செய்து, அவரைச் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சளைக்காமல் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தொடர் திருடனை மின்னல் வேகத்தில் தட்டித்












