Advertisement

செங்கல்பட்டு புறநகர் உணவகங்களில் கிடுகிடு விலை உயர்வு! 🍛📈

சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் உள்ளிட்ட செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் உணவகங்களில் தொடர்ந்து விலை உயர்த்தப்படுவதால், வெளியூர் இளைஞர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

🍽️ உணவு விலை தொடர்ந்து உயர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தின் வளர்ந்து வரும் புறநகர் பகுதிகளான பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம், பொத்தேரி, மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். ஒரகடம், மறைமலை நகர், மகேந்திரா வேர்ல்டு சிட்டி பகுதிகளில் வேலை செய்யும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இவர்கள் பெரும்பாலும் உணவகங்களையே நம்பியுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக உணவு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 📈

Advertisement

😟 50 சதவீதம் வரை உயர்வு

புறநகர் பகுதிகளில் உள்ள சில உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த 5 மாதங்களில் மட்டும் 3 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், விலை உயர்ந்த போதிலும் உணவின் சுவை மற்றும் தரம் குறைந்து வருவதாகவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். தினசரி உணவுக்காக கணிசமான தொகையை செலவிட வேண்டியிருப்பதால், குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் வெளியூர் இளைஞர்கள் மற்றும் பெண்கள் பொருளாதார சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலையை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ⚠️

🔥 எரிபொருள் செலவு உயர்வே காரணம் என விளக்கம்

இதுகுறித்து உணவக உரிமையாளர்கள் கூறுகையில், கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஏற்பட்ட சர்வதேச போர் சூழ்நிலை காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதாக தெரிவித்தனர். வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.6,000 வரை உயர்ந்ததாகவும், தற்போது சுமார் ரூ.3,000 ஆக உள்ளதாகவும் கூறினர். இதனால் பல உணவகங்கள் விறகு அடுப்புக்கு மாறிய நிலையில், விறகு விலையும் அதிகரித்து ஒரு டன் ரூ.6,000 வரை விற்பனையாகிறது. மூலப்பொருட்களின் கொள்முதல் விலை உயர்வுக்கு ஏற்பவே உணவுப் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர்கள் விளக்கம் அளித்தனர். 🍲

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement