Advertisement

4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் 4 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி குகனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செய்யூர் பகுதியில் நடைபெற்ற இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு செங்கல்பட்டு போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நஸ்ரின் பானு, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து குற்றவாளி குகனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement

மேலும், விதிக்கப்பட்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன் மற்றும் மறுவாழ்வை கருத்தில் கொண்டு, ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் லதா ஆஜராகி வாதாடினார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முக்கிய செய்தியை இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டுவதாக சட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement