Advertisement

சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு; சவரன் ரூ.1.10 லட்சத்தை தாண்டியது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.480 உயர்ந்து ரூ.1,10,880 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.60 உயர்வு ஏற்பட்டுள்ளதால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,860 என்ற விலைக்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு மற்றும் முதலீட்டாளர்களின் தேவை அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

Advertisement

இதற்கிடையில், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.270 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ச்சியான விலை உயர்வு காரணமாக நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். அதேசமயம், தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்த உயர்வு சாதகமாக அமைந்துள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement