Advertisement

“சுதந்திர தினப் பாதுகாப்பு” – சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு; பயணிகளுக்கு முக்கிய நேரக் கட்டுப்பாடு!

நாட்டின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் 5 அடுக்கு அதிரடிப் பாதுகாப்பு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினரின் தீவிரக் கண்காணிப்பு மற்றும் தீவிரச் சோதனைகள் காரணமாக விமான நிலையத்திற்குள் நுழைவதற்கும், பயணிகள் தங்களது உடைமைகளைச் பரிசோதனை செய்வதற்கும் வழக்கத்தை விடக் கூடுதல் நேரம் பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக, விமானப் பயணிகளுக்குச் சென்னை விமான நிலைய நிர்வாகம் சார்பில் முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் நேரக் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Advertisement

உள்நாட்டுப் பயணிகள் (Domestic Passengers): உள்நாட்டு விமானங்களில் பயணிப்போர், தங்களது விமானம் புறப்படும் நேரத்திற்குக் குறைந்தபட்சம் 1½ மணி நேரத்திற்கு (ஒன்றரை மணி நேரம்) முன்னதாகவே விமான நிலையத்திற்கு வந்து சேருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சர்வதேசப் பயணிகள் (International Passengers): வெளிநாடுகளுக்குச் செல்லும் சர்வதேச பயணிகள், தங்களது விமானம் புறப்படும் நேரத்திற்குச் சரியாக 3½ மணி நேரத்திற்கு (மூன்றரை மணி நேரம்) முன்பாகவே வருகை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

விமான நிலைய வளாகம், வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் மத்திய தொழிற்படைப் பாதுகாப்புப் படையினரின் (CISF) தீவிரக் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கவும், சோதனை நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு நல்கவும் பயணிகள் அனைவரும் இந்த நேரக் கட்டுப்பாடுகளைத் தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement