Advertisement

80-வது சுதந்திர தின விழா: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்குத் தீவிரப் பாதுகாப்பு!

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு 5 அடுக்குத் தீவிரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) மற்றும் காவல் துறை சார்பில் 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகத்திற்குள் நுழையும் கார், டாக்ஸி, வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.

பயணிகளை ஏற்றிக் கொள்ளவும், இறக்கிவிடவும் வரும் வாகனங்கள் வெகுநேரம் விமான நிலைய வளாகத்தில் நிற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் உடனடியாக வாகனங்களில் இருந்து இறங்கிச் செல்ல வேண்டும் எனவும், தேவையின்றி நீண்ட நேரம் நிற்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிஐஎஸ்எஃப் (CISF) போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும், விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளும் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நிறைவடையும் வரை இந்த கூடுதல் பாதுகாப்பு மற்றும் தீவிர வாகன சோதனைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் எந்தவித சிரமமுமின்றித் தங்களது பயணங்களை மேற்கொள்ள வழக்கமான நேரத்தை விடக் கூடுதல் நேரத்திற்கு முன்பாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement