செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

0
3

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியதுடன், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

செங்கல்பட்டில் நேற்று  (ஜூன் 16) பகல் நேரத்தில் கடும் வெயில் நிலவியது. வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்த நிலையில், இரவு நேரத்தில் வானிலை திடீரென மாறியது.

அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு நகரம் மற்றும் திம்மாவரம், வல்லம், வெண்பாக்கம், ஒழலூர், ஆலப்பாக்கம், புலிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.

இந்த மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதுடன், நீண்ட நேரமாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது.

திடீர் மழையால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இரவு நேரத்தில் நிலவிய இதமான காலநிலை மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.