Advertisement

ஊரப்பாக்கத்தில் பெண்ணின் கைப்பை பறிப்பு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

கூடுவாஞ்சேரி அருகே ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் பெண்ணின் கைப்பையை பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் ராமதாஸ் என்பவர் தனது மனைவியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திடீரென அவரது மனைவியின் கைப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

Advertisement

பறிக்கப்பட்ட கைப்பையில் ஒரு செல்போன் மற்றும் ரூ.1,000 ரொக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த தம்பதியர் உடனடியாக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மர்ம நபர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement