Advertisement

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்துச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வட தமிழகப் பகுதிகளில் இருந்து லட்சத்தீவுப் பகுதிகள் வரை சுமார் 3.1 கிலோமீட்டர் உயரத்தில் ஒரு வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் காலங்களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Advertisement

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement