Advertisement

“பாகிஸ்தானுக்குப் பேரடி!” – ஆகஸ்ட் 11-ஐ சுதந்திர நாளாக அறிவித்து பலூசிஸ்தான்!

பாகிஸ்தானின் பிடியில் இருந்து பிரிந்து தனி நாடாகச் செயல்படப்போவதாக அறிவித்த பலூசிஸ்தான், வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதியைத் தனது அதிகாரப்பூர்வச் சுதந்திர நாளாக உலகிற்கு அறிவித்து, சர்வதேச நாடுகளின் தூதரக அங்கீகாரத்தைக் கோரி வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாக விளங்கிய பலூசிஸ்தான், கடந்த பல தசாப்தங்களாக அந்நாட்டு ராணுவத்தின் கொடூரமான மனித உரிமை மீறல்கள், அடக்குமுறைகள் மற்றும் வளச் சுரண்டல்களுக்கு உள்ளாகி வந்தது.

இந்தச் சூழலில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்டு ‘சுதந்திர பலூசிஸ்தான் குடியரசு’ அமைவதாக அறிவித்த பலூச் விடுதலை இயக்கத் தலைவர்கள், தற்போது தங்கள் நாட்டின் இறையாண்மையை உலக அரங்கில் பறைசாற்றும் வகையில் ஆகஸ்ட் 11-ஆம் தேதியைச் சுதந்திர தினமாகக் கொண்டாட முடிவெடுத்துள்ளனர். 1947-இல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து பலூசிஸ்தான் பகுதி தனது சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தினத்தைக் குறிப்பிட்டே இந்தத் தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பைத் தொடர்ந்து, பலூசிஸ்தான் முழுவதும் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் ‘சுதந்திர பலூசிஸ்தான்’ தேசியக் கொடியை ஏற்றி, மக்கள் அனைவரும் சுதந்திரக் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று பலூச் தேசியத் தலைவர்கள் ஹாட் ஸ்பாட் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச அமைப்புகளும், உலகின் முன்னணி ஜனநாயக நாடுகளும் தங்கள் நாட்டின் சுதந்திரத்தை உடனடியாக அங்கீகரித்து, பாகிஸ்தானிய ராணுவத்தின் அராஜகப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தானுக்கு ராஜதந்திர ரீதியாகவும், புவிசார் அரசியல் ரீதியாகவும் பெரும் அதிர்ச்சியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், தெற்காசியப் பிராந்திய அரசியல் களத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.

Advertisement

பலூசிஸ்தான் பிராந்தியத்தில் நிலவும் இந்த உச்சக்கட்டப் பதற்றத்தை அடுத்து, பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் அவசர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement