Advertisement

அஜித் – ஷாலினி திருமண நாள் கொண்டாட்டம்! இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ஆதிக் பங்கேற்பு – வைரல் போட்டோஸ்!

தமிழ் திரையுலகின் நட்சத்திரத் தம்பதிகளான அஜித் குமார் மற்றும் ஷாலினி ஆகியோரின் திருமண நாள் விழா இன்று சென்னையில் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் திரையுலகைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்களும், முன்னணி இயக்குநர்களும் கலந்து கொண்டு தம்பதியினருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அஜித்தின் 63-வது படமான ‘குட் பேட் அக்லி’ (Good Bad Ugly) திரைப்படத்தை இயக்கி வரும் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தின் நெருங்கிய நண்பரான இயக்குநர் விஜய் மற்றும் ‘மங்காத்தா’ கூட்டணிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணையவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றனர். அஜித்தின் எளிமை மற்றும் ஷாலினி உடனான அவரது அழகான பிணைப்பு குறிந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. எப்போதும் லைம்-லைட்டில் இருந்து விலகியே இருக்கும் அஜித், இது போன்ற விசேஷ தருணங்களில் தனது நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தற்போது அஜித் ஒரே நேரத்தில் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். குறிப்பாக ‘குட் பேட் அக்லி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஷூட்டிங் அப்டேட்டுகள் வெளியாகி வரும் வேளையில், அப்படத்தின் இயக்குநர் ஆதிக்குடன் அஜித் தனது திருமண நாளைக் கொண்டாடுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. “அன்பான தம்பதிகளுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்” என ரசிகர்கள் ஹேஷ்டேக் உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement