சாஸ்திரம்பாக்கம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சாஸ்திரம்பாக்கம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் மு. வீரப்பன் இன்று (ஜூன் 19) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நெல் கொள்முதல், சேமிப்பு வசதிகள் மற்றும் விவசாயிகளுக்கான சேவைகள் குறித்து அதிகாரிகளிடம் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். ஆய்வின் போது நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் முருகானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜேஸ்வரி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்