தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026–2027 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், மீன்பிடித் தடைக்கால நிவாரணத்திற்காக ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.
தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர், கடல்சார் வளம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவக் குடும்பங்களின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம் எனச் சுட்டிக்காட்டினார்.
மேலும், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைக்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடாக ரூ.4,880 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதன் மூலம் மீன்பிடித் துறைமுகங்களை நவீனப்படுத்துதல், கால்நடை மருத்துவ வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் பாலாற்பத்தியைப் பெருக்குவதற்கான திட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.













