Advertisement

வண்டலூர் பூங்காவில் ‘தூதுவர்’ திட்டம் – மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

மே 6 முதல் தொடங்கும் இந்த முகாமில் பங்கேற்கும் மாணவர்களுக்கு நிபுணர்கள் நேரடி பயிற்சி வழங்கப்பட உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், 5ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பு மாணவர்களுக்காக ‘உயிரியல் பூங்கா தூதுவர்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மே 6ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

Advertisement

இந்த முகாமில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உயிரியல் பூங்கா மருத்துவர்கள், உயிரியலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து விலங்குகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்க உள்ளனர்.

பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ‘உயிரியல் பூங்கா தூதுவர்’ சான்றிதழ் மற்றும் பேட்ஜ் வழங்கப்படும்.

Advertisement

மேலும் விவரங்கள் மற்றும் பதிவு செய்ய https://aazp.in/summercamp2026/ என்ற இணையதளத்தை அணுகலாம்.

#VandalurZoo #ZooAmbassador #SummerCamp #Students #TamilNadu

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement