Advertisement
,

“அதிமுக மாஜிக்களுக்கு போஸ்ட்” – தவெக உள்கட்சி பதவிகளை மாற்றி அமைத்து முதல்வர் விஜய் நடவடிக்கை!

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) புதிதாக ‘மாவட்ட அமைப்புச் செயலாளர்’ என்ற உயர்மட்டப் பதவி உருவாக்கப்பட்டு, அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அதிமுகவிலிருந்து விலகி 6 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்படப் பல முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும் சூழலில், கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் இந்த உள்கட்சி மறுசீரமைப்பு மற்றும் புதிய பதவி உருவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

எம்.ஆர். விஜயபாஸ்கர்: கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இவருக்குக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

சி. விஜயபாஸ்கர்: புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விராலிமலை தொகுதிக்குட்பட்ட பகுதியின் மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளராக இசக்கி சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அம்பாசமுத்திரம் பகுதிக்கும் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த மரகதம் குமரவேலுக்குத் தவெகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் & புதிய பொறுப்புகள்:

விஜய் மக்கள் இயக்கக் காலத்திலிருந்து உழைத்து வந்த பழைய மாவட்டச் செயலாளர்கள் பலருக்குத் தேசிய மற்றும் மாநில அளவிலான அங்கீகாரமாகத் ‘துணைப் பொதுச்செயலாளர்’ பொறுப்புகள் வழங்கி பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ராஜ கோபால், ஜாகிர் உசேன், குமார் ITI, S. யுவராஜ் (சிங்காநல்லூர்), C.V. தினகரன், K. மணிகண்டன் (ஆவடி), R.S. மணிகண்டன், K. அருள்ராஜ், SDR. சாமுவேல் ராஜ் ஆகியோருக்குத் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய மாவட்டச் செயலாளர்கள் (எதிர்பார்ப்பு):

தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக ஸ்ரீநாத், நாங்குநேரி மாவட்டச் செயலாளராக ரெட்டியார்பட்டி நாராயணன், அம்பாசமுத்திரம் மாவட்டச் செயலாளராக இசக்கி சுப்பையா, திருப்போரூர் மாவட்டச் செயலாளராக குமரவேல் ஆகியோர் விரைவில் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படவுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாற்றுக் கட்சியிலிருந்து புதிதாக இணைந்த அனுபவமிக்க நிர்வாகிகளுக்கும், ஆரம்பக்காலம் முதல் இயங்கி வரும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் இடையே சரியான அதிகாரச் சமநிலையை உருவாக்கும் நோக்கில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement