Advertisement

“உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடி” – தமிழக பட்ஜெட்டில் முக்கியத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026–2027-ஆம் நிதியாண்டிற்கான மாநில வரவு செலவுத் திட்டத்தில் உயர்கல்வி, சமூக நீதி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்குக் கணிசமான நிதி ஒதுக்கீடுகளை நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.

மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கிலும், இளைஞர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு முக்கியத் துறைகளுக்கான நிதிப் பகிர்வு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மாநிலத்தில் உயர்கல்வித் துறையின் கட்டமைப்பை மேம்படுத்தவும், மாணவர்களின் டிஜிட்டல் கற்றலை ஊக்குவிக்கும் வகையிலும் ரூ.8,393 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசின் பிரதான நலத்திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை விரைவாகச் செயல்படுத்தத் தேவைப்படும் ரூ.17,150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விளிம்புநிலை மக்களின் நல்வாழ்வு மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ரூ.3,937 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான ‘வெற்றி மடிக்கணினித் திட்டம்’ (ரூ.2,000 கோடி) மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மூலம் தமிழ்நாட்டைத் தொழிற்துறையில் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இந்த நிதி ஒதுக்கீடுகள் பெரிதும் உதவும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement