Advertisement

தையூரில் சகாய மாதா தேர்பவனி கோலாகலம்

கேளம்பாக்கம் அடுத்த தையூரில் உள்ள சகாய மாதா ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் தேர்பவனி விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதன் முக்கிய நிகழ்ச்சியாக மாதா தேர்பவனி நேற்று மாலை நடைபெற்றது. மாலை 6 மணியளவில் ஆலய வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சகாய மாதா பவனி புறப்பட்டது.

Advertisement

இந்த தேர்பவனி கோயில் மான்யம், ஏரிக்கரை தெரு, தையூர் புதிய காலனி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. வழியெங்கும் பக்தர்கள் திரண்டு நின்று மாதாவை வழிபட்டனர்.

விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்ததுடன், பக்தி பாடல்களும் ஒலிபரப்பப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் மேற்கொண்டிருந்தனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement