Home செங்கல்பட்டு செங்கல்பட்டு இளைஞர்களுக்கு மாநில இளைஞர் விருது 2026: விண்ணப்பங்கள் வரவேற்பு

செங்கல்பட்டு இளைஞர்களுக்கு மாநில இளைஞர் விருது 2026: விண்ணப்பங்கள் வரவேற்பு

0

சமூக சேவையில் சிறப்பாக செயல்பட்ட இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் மாநில இளைஞர் விருது 2026 அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தகுதியான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதின் கீழ் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு ரூ.1,00,000 ரொக்கப் பரிசு, பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும். சமூக நலன், பொதுச்சேவை, இளைஞர் முன்னேற்றம் மற்றும் சமூக மாற்றத்திற்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

15 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் 01.04.2025 முதல் 31.03.2026 வரையிலான காலகட்டத்தில் சமூக சேவையில் ஆற்றிய பங்களிப்புகள் மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதிற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 06.07.2026 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும், சமூக சேவையில் சிறப்பான பங்களிப்பும் கொண்ட இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version