Advertisement

3 ஆண்டுகளுக்குப் பிறகு மேடையில் கெல்லி பிக்லர்

அமெரிக்காவின் பிரபல இசை நிகழ்ச்சியான American Idol மூலம் அறிமுகமான பாடகி Kelly Pickler, தனது கணவர் மறைவுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் மேடையில் தோன்றி ரசிகர்களை உருக்கத்தில் ஆழ்த்தியுள்ளார்.

2006ஆம் ஆண்டு American Idol நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற கெல்லி பிக்லர், தனது குரலும் தனித்துவமான பாடல் பாணியாலும் உலகளவில் ரசிகர்களை ஈர்த்தார். 2023ஆம் ஆண்டு அவரது கணவரும் பிரபல பாடலாசிரியருமான Kyle Jacobs மரணமடைந்தது, அவருக்கு பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் பொதுநிகழ்ச்சிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இருந்து விலகி இருந்தார்.

Advertisement

இந்நிலையில், American Idol நிகழ்ச்சியின் 20 ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அவர் சமீபத்தில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பாடகி Hannah Harper உடன் இணைந்து “A Broken Wing” என்ற பாடலை கெல்லி பிக்லர் பாடினார். இந்த பாடல் அவரது தனிப்பட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இருந்ததால், ரசிகர்கள் மற்றும் நடுவர்கள் அனைவரையும் ஆழமாக பாதித்தது.

அவரது பாடலை கேட்ட நடுவர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர். மேடையில் பேசிய கெல்லி பிக்லர், “பழைய நினைவுகள் மீண்டும் உயிர்த்தெழுந்தது போல உள்ளது. மீண்டும் வீட்டிற்கு திரும்பியதைப் போல உணர்கிறேன்” என்று உருக்கமாக தெரிவித்தார்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் Taylor Hicks மற்றும் Elliott Yamin உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement