Advertisement

ஹெல்மெட்டுக்குச் சங்கிலி பூட்டு: செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் ‘அந்நியன்’ பாணி விசித்திரம்!

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தனது ஹெல்மெட்டைச் சங்கிலியால் பூட்டி வைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தனது ஹெல்மெட்டைப் பாதுகாப்பதற்காகத் தடிமனான இரும்புச் சங்கிலியால் பைக்கோட சேர்த்துப் பூட்டி வைத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமிற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபர் ஒருவர், தனது ஹெல்மெட் திருடுபோய்விடக் கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்துள்ளார். திரைப்படப் பாணியில், கையோடு கொண்டு வந்த இரும்புச் சங்கிலியைப் பயன்படுத்தி, ஹெல்மெட்டைப் பைக்கோடு சேர்த்துப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

இந்த வினோதமான காட்சியைக் கண்ட பொதுமக்கள் வியப்படைந்ததுடன், அதனைத் தங்களது கைபேசியில் வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி மீம்ஸ் மற்றும் கிண்டல் பதிவுகளுக்குப் பிரதானப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement

ஏற்கனவே இந்த நபருக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஹெல்மெட் திருடு போன கசப்பான ಅನುಭವம் இருந்திருக்குமோ, அதனால் முன்னெச்சரிக்கையாக இப்படிச் செய்தாரா? அல்லது மாவட்டத்தின் உயரிய நிர்வாக மையமான ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே பாதுகாப்பு குறைபாடு நிலவுவதால் தான் பொதுமக்கள் தங்கள் உடைமைகளைப் பாதுகாக்க இப்படிச் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனரா? என இணையத்தில் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். காரணம் எதுவாக இருந்தாலும், “ஹெல்மெட் அணிவது எவ்வளவு கட்டாயமோ, அதைச் சங்கிலி போட்டுப் பாதுகாப்பதும் அவ்வளவு கட்டாயம்” என்பதை உணர்த்திய இந்தச் சம்பவம் செங்கல்பட்டில் சுவாரஸ்யமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

 

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement