Advertisement

பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவு!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் கருகும் நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு, இன்று முதல் சிறப்பு நனைப்பிற்குத் தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். விவசாயிகளின் நியாயமான கோரிக்கையினை ஏற்றுப் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவின்படி, இன்று முதல் வரும் ஜூலை 28ஆம் தேதி வரை மொத்தம் 15 நாட்களுக்குத் தங்கு தடையின்றித் தண்ணீர் திறந்து விடப்படும்.

தற்போதைய கோடைக்காலச் சூழல் மற்றும் அணையின் நீர்மட்டச் சரிவு காரணமாகக் காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டன. மேலும், கிராமப்புறங்களில் கால்நடைகளுக்கான குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வந்ததால், பாசனப் பயிர்களைக் காக்க உடனடியாகத் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கைகள் வலுத்தன. இதனைக் கருத்தில் கொண்டு, 2026-2027ஆம் ஆண்டு காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள பாசன நிலங்களில் நிலுவையிலுள்ள பயிர்களைக் காப்பாற்றவும், கால்நடைகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் மொத்தம் 648 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீரைத் திறந்துவிடத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.

Advertisement

அரசின் இந்த அவசர மற்றும் அதிரடி நடவடிக்கையால் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஆகிய மூன்று வட்டங்களில் உள்ள சுமார் 15,743 ஏக்கர் பாசன நிலங்கள் நேரடியாகப் பாசன வசதி பெற்று மறுவாழ்வு பெறவுள்ளன. உரிய நேரத்தில் விவசாயிகளின் துயரறிந்து தண்ணீரைத் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு இப்பகுதி விவசாயப் பெருங்குடி மக்களும், பொதுமக்களும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

 

Advertisement

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement