Advertisement

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ₹1,680 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் தொடக்க நாளான இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று மீண்டும் கடும் உயர்வை பதிவு செய்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், கடந்த ஜூன் 11ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ₹1,08,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் தங்கம் விலை மேலும் குறையலாம் என நுகர்வோர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதற்கு மாறாக அடுத்தடுத்த நாட்களில் விலை உயரத் தொடங்கியது.

Advertisement

நேற்று முன்தினம் கிராமுக்கு ₹60 மற்றும் சவரனுக்கு ₹480 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ₹13,860-க்கும், ஒரு சவரன் ₹1,10,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலையில் மேலும் பெரிய உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹210 உயர்ந்து ₹14,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ₹1,680 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ₹1,12,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

அதேபோல் வெள்ளி விலையும் உயர்வை கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ₹10 உயர்ந்து ₹280-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹10,000 உயர்ந்து ₹2.80 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement