Advertisement

கால்நடைகளுக்கு 12 இலக்க அடையாள எண் பதிவு கட்டாயம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கால்நடைகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் விவரங்களை தேசிய மின்னணு கால்நடை இயக்கத் திட்டத்தில் பதிவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கால்நடை வளர்ப்போர் தேவையான தகவல்களை வழங்கி திட்டத்தில் பதிவு செய்ய ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

🔹 தேசிய மின்னணு கால்நடை இயக்கத் திட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு தனித்துவமான 12 இலக்க அடையாள எண் கொண்ட காதுவில்லை பொருத்தி, அவற்றின் முழு விவரங்களையும் உரிமையாளர்களின் தகவல்களையும் தேசிய மின்னணு கால்நடை இயக்கம் (NDLM) மற்றும் பாரத் பசுதன் (Bharat Pashudhan) தளத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கால்நடைகளின் செயற்கை கருவூட்டல், காப்பீடு, கன்று பிறப்பு, கோமாரி நோய், அடைப்பான் நோய், கன்று வீச்சு நோய் உள்ளிட்ட தடுப்பூசி விவரங்கள் அனைத்தும் மின்னணு முறையில் சேமிக்கப்படுகின்றன. இதனால் கால்நடை கொள்முதல் மற்றும் விற்பனையின் போது முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

Advertisement

🔹 விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டுகோள்

தரவுகள் பதிவேற்றம் செய்யும் போது கால்நடை உரிமையாளர்களின் கைபேசி எண் மற்றும் ஆதார் எண் இணைக்கப்பட்டு, கைபேசிக்கு வரும் ஓடிபி (OTP) கடவுச்சொல் மூலம் தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி அனைத்து கால்நடைகளுக்கும் இந்த பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே கிராமங்களுக்கு வருகை தரும் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை வழங்கவும், அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகி கால்நடைகளை பதிவு செய்யவும் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement