Advertisement

2 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது

செங்கல்பட்டு அருகே 2 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

🚔 கஞ்சா விற்பனை குறித்து புகார்

செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று திம்மாவரம் பகுதியில் போலீசார் கண்காணிப்பில் இருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

🌿 2 கிலோ கஞ்சா பறிமுதல்

விசாரணையில், திம்மாவரம் அண்ணா நகரைச் சேர்ந்த பிரேம் குமார் என்ற கருப்பன் (31) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்மீது வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

⚖️ குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை

தொடர்ந்து, கைது செய்யப்பட்ட பிரேம் குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐமன்ஜமால், மாவட்ட ஆட்சியர் வீரப்பனுக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, செங்கல்பட்டு தாலுகா காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர் செங்கல்பட்டு சிறையில் இருந்த அவர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement