செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆப்பூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சியர் மு. வீரப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள், பராமரிப்பு பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆட்சியர் விரிவாக கேட்டறிந்தார். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டில் இத்திட்டத்தின் பங்களிப்பு குறித்தும் ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, வட்டாட்சியர் வாசுதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைசெல்வன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டங்கள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





