Advertisement

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: செங்கல்பட்டில் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இப்பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் வீரப்பன் தொடங்கி வைத்தார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துல்லியமாகவும், திறம்படவும் நடைபெற வேண்டும் என்பதற்காக கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், கணக்கெடுப்பின் போது சேகரிக்க வேண்டிய தகவல்கள், தரவு பதிவு முறை, புதிய தொழில்நுட்ப பயன்பாடுகள் மற்றும் பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளும் விதம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement

இந்த பயிற்சி முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குநர் சரிதா ஜலால், புள்ளியியல் ஆய்வாளர் லட்சுமிதேவி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், வளங்கள் ஒதுக்கீடு மற்றும் அரசின் நலத்திட்டங்களை திட்டமிடுவதற்கான முக்கிய அடிப்படை தரவுகளை வழங்கும் என்பதால், கணக்கெடுப்பு பணிகளை மிகுந்த பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement