Advertisement

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பிஎச்டி சேர்க்கை 2026! விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் (TNOU), 2026 ஜூன் பருவத்திற்கான பிஎச்டி (Ph.D.) ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் முழுநேர அல்லது பகுதிநேர அடிப்படையில் ஆராய்ச்சி படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளைத் தொலைதூரக் கல்வி முறையில் வழங்கி வந்தாலும், ஆராய்ச்சி படிப்புகளை (பிஎச்டி) உயர்தரக் கல்வித் தரத்துடன் நடத்தி வருகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு இருமுறை (ஜனவரி மற்றும் ஜூன்) நடத்தப்படுவது வழக்கம்.

Advertisement

பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜி.ஆர். செந்தில் குமார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது. 2026 ஜூன் பருவத்திற்கான பிஎச்டி (முழுநேரம் மற்றும் பகுதிநேரம்) மாணவர் சேர்க்கைக்குத் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவங்கள், கல்வித் தகுதி மற்றும் விதிமுறைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பல்கலைக்கழக இணையதளத்தில் விரிவாகப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

ஆராய்ச்சி படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnou.ac.in என்ற முகவரிக்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

தேவைப்படும் விவரங்கள்: விண்ணப்பப் படிவத்துடன் கல்விச் சான்றிதழ்கள், ஆராய்ச்சித் தலைப்பு (Research Proposal) மற்றும் பல்கலைக்கழகம் கோரும் இதர ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பகுதிநேர பிஎச்டி படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள், தாங்கள் பணியாற்றும் நிறுவனத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் கூடுதல் தகவல்களுக்குப் பல்கலைக்கழக இணையதளத்தைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement