வெள்ளி விலை கடந்த சில வாரங்களாக கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், நுகர்வோருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் கணிசமான சரிவை பதிவு செய்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ₹290 ஆக விற்பனையான நிலையில், தற்போது அது ₹255 ஆக குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராமுக்கு ₹35 குறைந்துள்ளதுடன், ஒரு கிலோ வெள்ளி விலை ₹35,000 வரை சரிந்துள்ளது.
இதன் காரணமாக வெள்ளி ஆபரணங்கள் வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். குறிப்பாக கொலுசு, மெட்டி, வளையல் உள்ளிட்ட வெள்ளி ஆபரணங்கள் மற்றும் குத்துவிளக்கு, சாமி சிலைகள், பூஜைப் பொருட்கள் வாங்க நினைப்போருக்கு இது சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.
சர்வதேச சந்தையில் வெள்ளி மற்றும் பிற உலோகங்களின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதால், எதிர்காலத்தில் விலை மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தேவையுள்ளவர்கள் தற்போதைய விலை சரிவை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.




