Advertisement

“மாதம்பட்டியே ஒப்புக்கொண்டார்” – தீயாய் பரவும் ஜாய் கிரிசில்டா எக்ஸ் தளப் பதிவு!

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான சட்டப் போராட்டம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. “மாதம்பட்டி ரங்கராஜுக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாக அவரே ஒப்புக்கொண்டார்” என ஜாய் கிரிசில்டா வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கடந்த 2023-ஆம் ஆண்டு தங்களுக்குத் திருமணம் நடந்ததாகவும், தான் கருவுற்றிருந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் குழந்தையின் தந்தை யார் என்பதைக் கண்டறிய மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த மரபணு பரிசோதனையின் முடிவில், ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பது உறுதி செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

Advertisement

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வழக்கை வரும் ஜூன் 8-ஆம் தேதிக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தள்ளிவைத்துள்ளார்.

வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், ஜாய் கிரிசில்டா தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

“மக்களே மாதம்பட்டி ரங்கராஜ், அவருக்கு 2 பொண்டாட்டி இருக்குன்னு அவரே ஒப்புக்கொண்டார்” என அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே திருமணமான மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டாவையும் திருமணம் செய்துகொண்டதை தற்போது ஏற்றுக்கொண்டுள்ளதாக இந்தப் பதிவு உணர்த்துகிறது.

முன்னதாக, ஜாய் கிரிசில்டாவின் புகார்களால் தங்களது ‘மாதம்பட்டி பாகசாலா’ நிறுவனத்தின் பெயருக்குக் களங்கம் ஏற்படுவதாகக் கூறி மாதம்பட்டி ரங்கராஜின் தந்தை தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மரபணு பரிசோதனை முடிவுகள் ஜாய் கிரிசில்டாவுக்குச் சாதகமாக வந்துள்ள நிலையில், இந்த விவகாரம் மாதம்பட்டி ரங்கராஜின் திரைப்பயணம் மற்றும் தொழில் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement