Advertisement

மீனவர் பிரச்னையில் அரசின் இரட்டை வேடம் அம்பலம்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடும் தாக்கு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, மீனவர் பிரச்னையில் அரசு இரட்டை வேடம் போடுவதாகச் சாடியுள்ளார்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர் பிரச்னையில் அரசு தொடர்ச்சியாக இரட்டை வேடம் போட்டு ஏமாற்றி வருவதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 9 அப்பாவித் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறிக் கைது செய்துள்ள செயல் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆளுங்கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ள அவர், “ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக நம்மைப் பார்த்து, ‘மீனவர் பிரச்னையில் மானே – தேனே – பொன்மானே என்று வெறும் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? ஒன்றிய அரசை வலியுறுத்தி உணர்வுப்பூர்வமான கள நடவடிக்கைகளை எடுக்க வேண்டாமா?’ என்று மேடைக்கு மேடை வீரவசனம் பேசியவர்கள், இன்று ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு கடமைக்குக் கடிதங்களை மட்டுமே எழுதிக் கொண்டிருப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் பின்பும் என அனைத்து விவகாரங்களிலும் இரட்டை வேடம் போடுவதைப் போல, வாழ்வாதாரத்திற்காகக் கடலுக்குச் செல்லும் ஏழைத் தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வுரிமை சார்ந்த விவகாரத்திலும் இந்த ‘சோபா மாடல்’ அரசு கண்துடைப்பு மற்றும் ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது என்றும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக மீட்க உறுதியான நேரடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் உதயநிதி திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement