Advertisement
,

மெட்ரோவில் பயணிக்க ‘சிங்கார சென்னை அட்டை’ அவசியம்!

சென்னை மெட்ரோ இரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயண முறையை ஒருங்கிணைக்கும் வகையில் ‘சிங்கார சென்னை அட்டை’ (தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை) பயன்பாட்டை முழுமையாக அமல்படுத்த தீர்மானித்துள்ளது.

இந்த அட்டை முதன்முதலில் 14.04.2023 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஒரே அட்டையை பயன்படுத்தும் வசதியை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி, 01.05.2026 முதல் சென்னை மெட்ரோ சேவையில் ‘சிங்கார சென்னை அட்டை’ மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனால், தற்போது பயன்படுத்தி வரும் பழைய மெட்ரோ பயண அட்டைகள் படிப்படியாக நீக்கப்பட உள்ளன. பயணிகள் தங்களது பழைய அட்டைகளில் உள்ள மீதமுள்ள தொகையை இழக்காமல் இருக்க, அதை புதிய முறைக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பயணிகள் தங்களது தொகையை, மெட்ரோ மொபைல் செயலி மூலம் கிடைக்கும் QR Stored Value Pass (SVP) அல்லது நேரடியாக தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைக்கு மாற்றிக்கொள்ளலாம். இந்த செயல்முறை எளிதாகவும், ஆன்லைன் மூலமாகவும் செய்யக்கூடியதாக இருப்பதால் பயணிகளுக்கு எந்த சிரமமும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், இந்த புதிய மாற்றம் மூலம் பயண அனுபவம் மேலும் பாதுகாப்பாகவும், விரைவாகவும் இருக்கும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒரே அட்டையை பயன்படுத்தி பல்வேறு போக்குவரத்து சேவைகளில் பயணம் செய்யும் வசதி கிடைப்பதால், இது பயணிகளுக்கு பெரும் நன்மையாக இருக்கும்.

இந்த மாற்றத்தால் ஏற்படும் தற்காலிக சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுள்ள மெட்ரோ நிர்வாகம், பயணிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது. புதிய அட்டையை உடனடியாக பயன்படுத்தி, சீரான பயணத்தை தொடருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement