Advertisement
,

ஜூன் 30: தொழில்முனைவோருக்கான ‘ChatGPT’ பயிலரங்கம்

சென்னையில் செயல்பட்டு வரும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII) சார்பில், “ChatGPT for Entrepreneurs” என்ற தலைப்பில் ஒருநாள் சிறப்பு பயிலரங்கம் ஜூன் 30, 2026 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கிண்டி, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள EDII வளாகத்தில் நடைபெறுகிறது.

தொழில்முனைவோர், ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் உள்ளிட்டோருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயிலரங்கம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை வணிக வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கிறது.

Advertisement

பயிலரங்கத்தில் ChatGPT மற்றும் Prompt Engineering குறித்த அடிப்படை மற்றும் மேம்பட்ட அம்சங்கள் விளக்கப்படுகின்றன. தொழிலுக்கேற்ற திறமையான கேள்விகளை உருவாக்குவது, AI மூலம் இலக்குகளை நிர்ணயிப்பது மற்றும் வணிகத் திட்டங்களை வடிவமைப்பது போன்றவை கற்றுத்தரப்படுகின்றன.

Advertisement

மேலும், சமூக வலைதள சந்தைப்படுத்தல், பிராண்டிங், விளம்பர திட்டமிடல், உள்ளடக்க உருவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாட்டை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் பயிற்சி வழங்கப்படுகிறது.

தொழில் வளர்ச்சியை கண்காணித்தல், செயல்திறன் மதிப்பீடு, தரவு பகுப்பாய்வு உள்ளிட்ட அம்சங்களில் ChatGPT-ஐ எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதும் விளக்கப்படுகிறது. தொழில்முனைவோர் தங்களது நடைமுறை சவால்களை முன்வைத்து AI மூலம் தீர்வுகளை ஆராயும் சிறப்பு அமர்வும் இடம்பெறுகிறது.

பங்கேற்பாளர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட ChatGPT பயன்பாட்டு வழிகாட்டுதல்களைக் கொண்ட இ-புத்தகம் வழங்கப்படுவதுடன், தினசரி AI குறிப்புகள் பெற வாட்ஸ்அப் குழுவிலும் இணையும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த பயிலரங்கில் பங்கேற்க தொழில்நுட்ப அறிவோ அல்லது குறியீட்டு (Coding) திறமையோ தேவையில்லை. அடிப்படை ஆங்கில அறிவு உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இந்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு ஜூன் 30, 2026 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. பங்கேற்பாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு கட்டாயமாகும். ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.editn.in மூலம் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9840114680 மற்றும் 9360221280 என்ற கைப்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement