Advertisement

‘Brothers and Sisters’ வெப் சீரிஸ்: குடும்ப உறவுகளை சொல்லும்..!

தமிழ் ஓடிடி தளங்களில் தொடர்ந்து புதிய தொடர்களை வெளியிட்டு வரும் Jio Hotstar இப்போது மேலும் ஒரு குடும்பக் கதையை மையமாகக் கொண்ட புதிய வெப் சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘Brothers and Sisters’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரை, ‘உப்பு புளி காரம்’ மற்றும் ‘போலீஸ் போலீஸ்’ போன்ற தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார்.

இந்த தொடரில் போஸ் வெங்கட் மற்றும் காயத்ரி சாஸ்திரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுஃப், கிஷோர், ஷ்ரவ்னிதா, புரமோதினி உள்ளிட்ட பலர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

கதை, ஒரு நடுத்தர குடும்பத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது. டெக்ஸ்டைல்ஸ் ஷோரூம் நடத்தும் கட்டுப்பாடான குடும்பத் தலைவராக போஸ் வெங்கட் நடிக்கிறார். குடும்பத்தை இணைத்து வைத்திருக்கும் அமைதியான இல்லத்தரசியாக காயத்ரி சாஸ்த்ரி நடிக்கிறார். நான்கு உடன்பிறந்தவர்களின் வாழ்க்கைத் தேர்வுகள், அவர்களின் தொழில், தனித்தன்மை மற்றும் உறவுகளுக்கிடையிலான சிக்கல்கள் ஆகியவை இந்த தொடரின் முக்கிய அம்சங்களாகும்.

நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் அன்றாட வாழ்க்கையின் நெருக்கமான தருணங்களை இணைக்கும் இந்த தொடர், குடும்ப உறவுகளின் வலிமையை வெளிப்படுத்துகிறது. மொத்தம் 100 அத்தியாயங்களைக் கொண்ட இந்த வெப் சீரிஸ், மே மாதம் முதல் வாரம் தோறும் வெளியாக உள்ளது.

Advertisement

குடும்பத்தை மையமாகக் கொண்ட சீரிஸ்களை விரும்பும் பார்வையாளர்களுக்கு ‘Brothers and Sisters’ ஒரு சிறந்த பொழுதுபோக்கு தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement