வண்டலூர்: பெண்ணிடம் தங்க பிரேஸ்லெட் பறிப்பு

0
4

வண்டலூர் மேம்பாலம் அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணிடம் தங்க பிரேஸ்லெட்டை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

காயத்ரி (24) என்ற இளம்பெண் நள்ளிரவு நேரத்தில் வண்டலூர் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் அவரது பைக்கை இடிப்பது போல் அருகில் வந்துள்ளனர்.

இதனால் காயத்ரி நிலைதடுமாறிய நிலையில், அவரது கையில் அணிந்திருந்த முக்கால் சவரன் தங்க பிரேஸ்லெட்டை மர்மநபர்கள் பறித்துக் கொண்டு வேகமாக தப்பிச் சென்றனர்.

சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த காயத்ரி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதுடன், வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, தப்பியோடிய இருவரையும் அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.