நிர்வாகக் குளறுபடி மற்றும் தேர்தல் நடத்தாத காரணங்களால் இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் அங்கீகாரத்தை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்துள்ளது.
நிர்வாகக் குளறுபடி, உரிய காலத்தில் தேர்தலை நடத்தத் தவறியது உள்ளிட்ட பல்வேறு புகார்களைத் தொடர்ந்து, இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பிற்கு (TTFI) வழங்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புக்கான அங்கீகாரத்தை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தற்காலிகமாக இடைநீக்கம் (Suspension) செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, அமைப்பின் உள்விவகார முரண்பாடுகள், தேர்தல் தள்ளிப்போனது மற்றும் விளையாட்டு வீரர்களின் நலன் சார்ந்த முடிவுகளில் தாமதம் ஏற்பட்டது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், அதற்குத் திருப்திகரமான பதில் அளிக்கப்படாத நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்தியச் சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்புடன் (ITTF) கலந்தாலோசித்து, நிர்வாகத்தைச் சீரமைக்கும் வரை விளையாட்டினைத் தடையின்றி நடத்த இடைக்கால நிர்வாகக் குழு ஒன்றை (Ad-hoc Committee) அமைக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு (IOA) அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.













