Advertisement

TNPSC Group II/IIA தேர்வுக்கு இலவச பயிற்சி

செங்கல்பட்டு மாவட்ட போட்டித் தேர்வாளர்களுக்கான இலவச TNPSC Group II/IIA பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடங்குகின்றன.

🎯 TNPSC Group II/IIA இலவச பயிற்சி

Advertisement

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், பல்வேறு அரசு போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 11.08.2026 அன்று வெளியிடப்பட்ட TNPSC Group II/IIA தொகுதி-II/IIA முதல் நிலைத் தேர்வுக்கு தயாராகும் போட்டித் தேர்வாளர்களுக்காக சிறப்பு நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

📚 ஆக.18 முதல் நேரடி வகுப்புகள்

Advertisement

மாவட்ட நிர்வாகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இந்த நேரடி பயிற்சி வகுப்புகள் 18.08.2026 (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளன. பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும். TNPSC Group II/IIA தேர்வுக்கு தயாராகும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித் தேர்வாளர்கள் இந்த இலவச பயிற்சியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

📞 விண்ணப்பிக்கவும் – விவரங்களுக்கு தொடர்பு கொள்ளலாம்

பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலுடன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள டி-பிளாக்கில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-27426020, 9499055895, 9486870577, 9344738148 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் மு.வீற்பன், இ.ஆ.ப., கேட்டுக்கொண்டுள்ளார். இத்தகவலை செங்கல்பட்டு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement