Home செங்கல்பட்டு மது குடிக்க பணம் தர மறுத்த மீன் வியாபாரி மீது தாக்குதல்; ஒருவர் கைது

மது குடிக்க பணம் தர மறுத்த மீன் வியாபாரி மீது தாக்குதல்; ஒருவர் கைது

0

திருக்கழுக்குன்றம் அருகே மது அருந்த பணம் தர மறுத்த மீன் வியாபாரியை தாக்கிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஈச்சங்கரணை கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் (29) என்பவர் ஏரியில் மீன் பிடித்து விற்பனை செய்து வருகிறார். நேற்று மாலை அவரது கடைக்கு பரமசிவன் நகர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (28), சந்தோஷ் (29), இளங்கோவன் (25), கௌதம் (27) ஆகிய நால்வரும் வந்துள்ளனர்.

அப்போது மது அருந்துவதற்காக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. திருவேங்கடம் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த நால்வரும் அவரை தகராறில் ஈடுபட்டு, மது பாட்டில்களால் தலையில் தாக்கியதாக தெரிகிறது.

இந்த தாக்குதலில் திருவேங்கடத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருக்கழுக்குன்றம் போலீசார், காயமடைந்தவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய ஆகாஷை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சந்தோஷ், இளங்கோவன் மற்றும் கௌதம் ஆகிய மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version