Home செங்கல்பட்டு ‘தமிழர் பரிந்துரை வணிகம்’ குழுவின் 100-வது வார விழா

‘தமிழர் பரிந்துரை வணிகம்’ குழுவின் 100-வது வார விழா

0

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் உள்ள கிராண்ட் ஹோட்டலில் ‘தமிழர் பரிந்துரை வணிகம்’ குழு 12-ன் 100-வது வார சிறப்பு கூட்டம் இன்று (மே 30) காலை உற்சாகமாக நடைபெற்றது.

வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர்களை ஒருங்கிணைத்து பரிந்துரை அடிப்படையிலான வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பின் 100-வது வார நிகழ்வு சிறப்பாக கொண்டாடப்பட்டது. குழுவின் தலைவர் வினோத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சென்னை மற்றும் மலேசியாவில் செயல்பட்டு வரும் தன்வந்திராலயா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பிரபல ஆயுர்வேத மருத்துவரான வனிதா முரளிக்குமார் பங்கேற்றார். அவர் தொழில் வளர்ச்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து விரிவாக உரையாற்றினார்.

மேலும், தொழில்முனைவோர்கள் தங்களது வணிகத்தை விரிவுபடுத்துவதில் பரிந்துரை வணிகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவதன் மூலம் நீண்டகால வெற்றியை அடைய முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

100-வது வாரத்தை முன்னிட்டு குழு உறுப்பினர்களின் சாதனைகள் பாராட்டப்பட்டதுடன், வணிக வளர்ச்சிக்கான அனுபவங்கள் மற்றும் கருத்துகளும் பகிரப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் வணிக வாய்ப்புகளை பரிமாறிக் கொண்டு நெட்வொர்க்கிங் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

இந்த சிறப்பு கூட்டம் தொழில்முனைவோர்களுக்கு புதிய ஊக்கத்தையும், வணிக வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளையும் வழங்கியதாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version