Home செங்கல்பட்டு ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் விபத்துக் காப்பீடு; இந்திய அஞ்சல் துறை சிறப்பு திட்டம்

ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் விபத்துக் காப்பீடு; இந்திய அஞ்சல் துறை சிறப்பு திட்டம்

0

செங்கல்பட்டு உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் அதிக பாதுகாப்பு பெறும் வகையில், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) சிறப்பு விபத்துக் காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, முன்னணி பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டுக்கு மிகவும் குறைந்த பிரீமியத்தில் விபத்துக் காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, ஆண்டுக்கு ரூ.520 செலுத்தினால் ரூ.5 லட்சம், ரூ.555 செலுத்தினால் ரூ.10 லட்சம், ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை விபத்துக் காப்பீட்டு பாதுகாப்பு பெற முடியும்.

இந்தத் திட்டத்தில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் சேர தகுதியுடையவர்கள். எதிர்பாராத விபத்துகள் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு அல்லது நிரந்தர உடல் ஊனமுற்ற நிலை போன்ற சூழல்களில் குடும்பத்தினருக்கு நிதி பாதுகாப்பு கிடைக்கும் வகையில் இந்த காப்பீடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறைந்த செலவில் அதிக காப்பீட்டு பாதுகாப்பு கிடைப்பதால், தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அஞ்சல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள தபால் நிலையம் அல்லது இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவை மையங்களை அணுகலாம்.

NO COMMENTS

Exit mobile version