தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி டிஜிபியாக பாலநாகாதேவியும், பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏடிஜிபியாக வித்யா ஜெயந்த் குல்கர்னியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நிர்வாக வசதி மற்றும் சட்டம் – ஒழுங்கை மேம்படுத்தும் பொருட்டு, 10 உயர் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாகத் தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குற்றப் புலனாய்வுத் துறையான சிபிசிஐடி (CB-CID) டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஜி. பாலநாகாதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், மத்தியப் புலனாய்வு அமைப்பில் (CBI) பணியாற்றித் தாய் கேடருக்குத் திரும்பிய வித்யா ஜெயந்த் குல்கர்னி பொருளாதாரக் குற்றப்பிரிவு (Economic Offences Wing) கூடுதல் டிஜிபியாக (ADGP) நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுடன் சேர்த்து மேலும் பல முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் பல்வேறு துறைப் பொறுப்புகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தின் முக்கியக் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பொருளாதாரப் குற்றப்பிரிவுகளுக்குப் புதிய தலைமைகள் நியமிக்கப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் உடனடியாகத் தங்களது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













