Advertisement

சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை: மத்திய சட்ட அமைச்சரிடம் தேமுதிக எம்.பி. சுதீஷ் மனு!

சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்கக் கோரி மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலிடம் தேமுதிக எம்.பி. எல்.கே. சுதீஷ் மனு அளித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் கிளையைச் சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலைச் மத்திய சட்ட அமைச்சகம் நேரில் சந்தித்து தேமுதிக நாடாளுமன்ற உறுப்பினர் எல்.கே. சுதீஷ் இராச்சிய சபா உறுப்பினர் பட்டியல்கள் கோரிக்கை மனு அளித்துள்ளார்.டெல்லியில் உள்ள மத்திய அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, தென் மாநிலங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வழக்குகளுக்காகத் தலைநகர் டெல்லிக்கு வந்து செல்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் அதிக செலவினங்கள் குறித்து எல்.கே. சுதீஷ் விரிவாக எடுத்துரைத்தார்.

Advertisement

மேலும், தென்னிந்திய மக்களின் நீதித்துறை சார்ந்த அணுகலை எளிதாக்கவும், வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்கவும் சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் புதிய கிளையைத் தொடங்குவது அவசியமானது எனக் சுட்டிக்காட்டினார். தேமுதிக சார்பில் அளிக்கப்பட்ட இந்த மனுவை நேரில் பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இது குறித்துத் தொடர்புடைய உயர் அதிகாரிகளுடனும் தலைமை நீதிபதியுடனும் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

தென் மாநில வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீண்டகாலமாகக் கோரி வரும் இந்தக் கோரிக்கைக்குத் தேமுதிக நாடாளுமன்ற உறுப்பினர் குரல் கொடுத்துள்ளது அரசியல் மற்றும் நீதித்துறை வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement