தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து அரசு முதன்மைச் செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, கடந்த சில காலமாகக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ருந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்திய பிரதா சாகு பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநராகப் பணியாற்றி வந்த கலைச்செல்வி மோகன், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் சமக்ரா சிக்ஷா (அனைவருக்கும் இடைநிலைக் கல்வி) திட்டத்தின் மாநில இயக்குநராக நியமிக்கப்பட்டுப் பொறுப்பேற்றுள்ளார்.
அரசு நிர்வாகத்தை மேலும் துரிதப்படுத்தவும், முக்கியத் துறைகளின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













