Advertisement

40 வயசுக்கு மேல நண்பர்களை எதிர்பார்க்க முடியாது: ஆர்.ஜே. பாலாஜி கலகலப்பான பேச்சு!

ஸ்பாட்டிஃபை ‘பச்ச சட்ட’ நிகழ்ச்சி தொடக்க விழாவில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, உறவுகள் குறித்தும் தனது கடந்த கால வாழ்க்கை மற்றும் சினிமா அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.

ஸ்பாட்டிஃபை (Spotify) தளத்தில் ஒலிபரப்பாகி வந்த ‘பச்ச சட்ட’ நிகழ்ச்சி மீண்டும் தொடங்குவதை ஒட்டி, ரசிகர்களுடன் கலந்துரையாடும் சிறப்பு நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தனது திரைப்பயணம், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

Advertisement

நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் இயக்கிய ‘கருப்பன்’ படத்தின் ‘GOD MODE’ பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். ‘காந்தாரா’ படம் பார்த்த பிறகே அந்தப் படத்தில் ஒரு சிறப்பான காட்சியை இணைத்ததாகவும், படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பே அனைத்து வசனங்களையும் தெளிவாக எழுதி முடித்துவிடுவதே தனது வழக்கம் என்றும் கூறினார். தனக்கு ஸ்பாட் எடிட்டிங் செய்யும் பழக்கம் இல்லை என்றும், தான் எடுத்த காட்சிகளைத் திரும்பிப் பார்ப்பது தனக்குப் பிடிக்காது என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தனது கடந்த காலம் மற்றும் உறவுகள் குறித்துப் பேசுகையில், “ஆர்.ஜே. பாலாஜி ஆவதற்கு முன்பு இருந்த பாலாஜியை எனக்குப் பிடிக்காது. அந்தப் பழைய பாலாஜி ஒரு வழிப்பறி கொள்ளையனாகவோ அல்லது சைக்கோ கொலைகாரனாகவோ கூட ஆகியிருக்கலாம்; அப்போதைய பாலாஜியை நானே போலீசில் பிடித்துக் கொடுத்திருப்பேன்” என்றார். மேலும், “40 வயதிற்கு மேல் நண்பர்கள் எப்போதும் கூடவே இருப்பாங்கனு எதிர்பார்க்க முடியாது. 20 வயது அல்லது 30 வயதில் இருந்தது போல் 40 வயதில் எங்களால் இருக்க முடியாது. உறவுகள் என்பது சில மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் நம்முடன் பயணித்துவிட்டுச் செல்வதுதான்” என்று தத்துவார்த்தமாகப் பேசினார். இந்நிகழ்ச்சியில் ‘பச்ச சட்ட’ நிகழ்ச்சிக்கு இசையமைத்த சாய் அபயங்கர் மற்றும் திரளான ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

 

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement