புதுச்சேரி நகரப் பகுதிகளில் காலை மற்றும் மாலை நெரிசல் நேரங்களில் கனரக வாகனங்கள் இயங்கத் தடை விதித்துப் போக்குவரத்துச் சீனியர் எஸ்பி திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி நகரப் பகுதிகளில் அதிகரித்துவரும் வீதி விபத்துகளைத் தடுக்கும் பொருட்டும் தினமலர் செய்தி, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும் தினமலர் செய்தி, காலை மற்றும் மாலை வேளைகளில் கனரக வாகனங்கள் இயக்கக் கட்டுப்பாடுகள் விதித்துப் புதுச்சேரி போக்குவரத்து காவல் துறை சீனியர் எஸ்பி திவ்யா உத்தரவிட்டுள்ளார். சமீபகாலமாகப் புதுச்சேரியில் சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள எஸ்பி திவ்யா, பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் காலை, மாலை நெரிசல் நேரங்களில் அதிவேகமாக வரும் கனரக வாகனங்களால் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதைக் கருத்தில் கொண்டு, தினமும் காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் 7:00 மணி வரையிலும் டிப்பர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நகர எல்லைக்குள் இயங்கத் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
மேலும், லாரிகளில் ஓட்டுநர்களுடன் கிளீனர்களைக் கட்டாயம் பணியமர்த்த வேண்டும் என்றும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க உரிமையாளர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த நேரக் கட்டுப்பாடுகளையும் விதிகளையும் மீறி இயக்கப்படும் வாகனங்களைக் பறிமுதல் செய்வதோடு, உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.













