Advertisement

விண்வெளித் துறையில் சாதனை படைக்கும் இந்தியா: ஸ்டார்ட் அப் சிஇஓக்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

டெல்லியில் 20 விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, விவசாயம் மற்றும் கால்நடை மேலாண்மைக்கு விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வலியுறுத்தினார்.

இந்தியாவின் விண்வெளித் துறையில் துணிச்சலுடன் களமிறங்கியுள்ள இளம் தொழில்முனைவோரின் அசுர வளர்ச்சியால் இந்தியா உலக அளவில் பெரும் சாதனைகளைப் படைத்து வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் நாட்டின் முன்னணி 20 விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை (CEOs) பிரதமர் மோடி நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். அப்போது, விண்வெளித் தொழில்நுட்பத்தை வெறும் ராக்கெட் ஏவுதலோடு மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், அதனை நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயம், கால்நடை மேலாண்மை மற்றும் பால்வளம் உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசியத் துறைகளின் வளர்ச்சிக்கு எவ்வாறு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்பது குறித்து விரிவாக ஆராயுமாறு நிறுவனத் தலைவர்களிடம் அவர் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பு தொடர்பாகப் பிரதமர் மோடி விடுத்துள்ள அறிக்கையில், “இந்திய விண்வெளித் துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தி வரும் துடிப்பான இளம் தொழில்முனைவோரைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளை முழுமையாக நம்பி, தளராத உறுதியுடன் அவர்கள் முன்னெடுத்த கடின உழைப்பின் விளைவாகவே, கடந்த சில ஆண்டுகளில் உலக விண்வெளி அரங்கில் இந்தியா இமாலய சாதனைகளைப் பதிவு செய்துள்ளது” என்று பாராட்டியுள்ளார்.

Advertisement

மேலும், எதிர்காலத் தேவைகளுக்கான அதிநவீனத் திறன்களை வளர்த்தெடுக்கும் இந்த இளம் சாதனையாளர்களின் வளர்ச்சிப் பயணத்தில் மத்திய அரசு என்றென்றும் பக்கபலமாகத் துணை நிற்கும் என்று உறுதியளித்த பிரதமர், உலக நாடுகளுக்கு வணிக ரீதியான விண்வெளித் தீர்வுகளை வழங்கும் சர்வதேச மையமாகத் திகழும் வல்லமையை இந்தியா பெற்றுள்ளது என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

 

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement