Advertisement

புத்தகங்களைப் படிக்க வேண்டும், ஐபேட் வேண்டாம்: செங்கல்பட்டில் லதா ரஜினிகாந்த் பேச்சு!

செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் மேடை இயக்க விழாவில் பங்கேற்ற லதா ரஜினிகாந்த், புத்தகங்களை வாசிப்பது அறிவை வளர்க்கும் என்றும், விஜயின் அரசு மற்றும் தனுஷ் அரசியல் குறித்துப் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் அறிவை மேம்படுத்தும் என்றும், ஐபேடைப் பார்த்துப் படிப்பதால் அறிவு மழுங்கிவிடும் அபாயம் உள்ளதாகவும் செங்கல்பட்டில் நடைபெற்ற விழாவில் லதா ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

Advertisement

செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ‘மக்கள் மேடை மக்கள் இயக்கம்’ சார்பில் “இது மக்கள் சேவை… இது மக்கள் சக்தி…” என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, “பள்ளிக்குச் செல்வது சந்தோஷமா… வீட்டில் இருப்பது சந்தோஷமா…” என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ரஜினி ஆஷ்ரம் பள்ளி நிறுவனரும், நடிகர் ரஜினிகாந்தின் மனைவியுமான லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய லதா ரஜினிகாந்த், குழந்தைகளை தினமும் சிறிது நேரமாவது விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், “தற்போது புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் மீண்டும் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. புத்தகங்களை வாசித்தால் அறிவு வளரும். அதைவிட்டுவிட்டு ஐபேடைப் பார்த்துப் படிப்பதால் அறிவு மழுங்கிவிடும் அபாயம் உள்ளது. அதனால் சிறுவயதிலேயே குழந்தைகளுக்குப் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதேபோல் மரம், நிலம் மற்றும் நீர் ஆகிய இயற்கை வளங்களைப் பாதுகாப்பதும் நமது முக்கியக் கடமையாகும்” என்று குறிப்பிட்டார்.

Advertisement

தொடர்ந்து பேசிய அவர், அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து அவர்களுக்குக் கல்வி, ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே மக்கள் மேடையின் நோக்கம் என்றும், இது அரசியல் கட்சி தொடங்குவதற்காக ஆரம்பிக்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழகத்தில் விஜய் அரசு செயல்பாடு குறித்தும், நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவாரா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த லதா ரஜினிகாந்த், “விஜய் அரசு குறித்தோ அல்லது தனுஷ் அரசியல் குறித்தோ நான் எதுவும் பேச விரும்பவில்லை” என்று வெளிப்படையாகத் தெரிவித்துச் சென்றார்.

 

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement