செங்கல்பட்டில் கலைஞர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்: திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

0
3

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில், திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம். அன்பரசன், ஜி. செல்வம், நகரமன்ற தலைவர்கள் சண்முகம், தேன்மொழி, ஒன்றிய செயலாளர்கள் ராஜன், சந்தானம் மற்றும் கூடுவாஞ்சேரி முன்னாள் நகரமன்ற தலைவர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் கலைஞரின் அரசியல், சமூக மற்றும் தமிழ்மொழி வளர்ச்சிக்கான பங்களிப்புகள் குறித்து பேசப்பட்டதுடன், அவரது கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் நினைவுகூரப்பட்டன.

பொதுக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு கலைஞருக்கு மரியாதை செலுத்தினர்.