குரோம்பேட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த முதல் நிலை காவலர் மீது ஆட்டோ மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை காவலர் மணிகண்டன், எம்.ஐ.டி. சர்வீஸ் சாலையில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.
இந்த விபத்தில் காவலர் மணிகண்டனின் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, காயமடைந்த பகுதியில் 12 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்
