செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் நேற்று (15.06.2026) நடைபெற்ற மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், பாரத சாரணர் மற்றும் சாரணியர் இயக்க ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாநில அளவில் நடைபெற்ற சிறப்பு பயிற்சியில் கலந்து கொண்டு வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் திரு. மரு. எம். வீரப்பன், இ.ஆ.ப., நேரில் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மாணவர்களின் தலைமைத்திறன், ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பதில் சாரணர் இயக்க ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி க்யூரி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு வெங்கடாசலம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) திருமதி பவானி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமதி விஜயகுமாரி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் திருமதி சங்கீதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு ரமேஷ் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாநில அளவிலான பயிற்சியில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் இந்த பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
